என்னைப் பற்றி
முழுப்பெயர் – கௌதமராஜ்.சி
சொந்த ஊர் – திருச்செங்கோடு
படிப்பு – இளங்கலை கணிப்பொறி அறிவியல்.
வேலை – தகவல் தொழில்நுட்பம் என்ற நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டு முடிந்த வரை நீந்திக் கொண்டே இருக்கிறேன், கலங்கரை விளக்கை நோக்கி !!
அனைத்து துறைகளிலும் ஆர்வமுண்டு இருந்தாலும் தமிழ் ஆர்வலன், நடனப்ரியன், புத்தக விரும்பி, சினிமா காதலன், புகைப்பட பைத்தியம்!
நான் யார் என்று எனக்கே சில சமயம் தெரியாது!
முகத்தில் அறைந்தார் போல் பேசி சுயநலமாக இருக்க நினைத்து இன்று வரை தோற்றுக் கொண்டிருப்பவன்.
நேர்மையாக இருக்கிறேன் என்று சொல்ல முடியாது ஆனால் அந்த போதை எனக்கு மிகவும் பிடிக்கும்!
நான் நானாக வாழ விரும்புபவன்!

