பார்த்துக்”கலாம்"

Harry Gowtham

8/11/2015

இதுவரை அவர் ஆற்றிய எந்த உரையையும் நான் முழுமையாக கேட்டதில்லை

அவர் எழுதிய எந்த புத்தகத்தையும் நான் படித்ததில்லை

அவர் ஆற்றிய சாதனைகள் கூட முழுவதும் தெரியாது

அப்படியிருக்க இரண்டு நிமிட வீடியோவில் இவ்வளவு அடி மனதில் எப்படி ஒருவரை கவர

வைக்க முடிந்தது?! ஐரோப்பியன் பார்லிமெண்ட்டில் “கனியன் பூங்குன்றனாரின்

”யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்று அவர் சொன்ன தமிழ் இலக்கிய உதாரணம் தான்

அது! அவர் ஆற்றிய உரை அன்று பாரத தேசத்தையே பெருமைப்படுத்தியது.

எனக்கு புத்தக கண்காட்சி என்றால் அவ்வளவு விருப்பம், எவ்வளவு வேலை பளு

என்றாலும் கொஞ்ச நேரமாவது எட்டிப்பார்த்துவிட்டு வந்துவிடுவேன். கடந்த வருடம் August 2014

இதே ஆகஸ்ட்டில் ஈரோடு புத்தக கண்காட்சியில் நிறைவு நாளன்று திரு. அப்துல்கலாம் ஐயா

அவர்கள் கலந்து கொண்டார், அவர் வந்திருக்கும் போது அவ்வளவு கூட்டம் ”ஏவுகனை” ஆயிற்றே!!

கலாம் ஐயா என்பதால் வழக்கமான அரங்கில் இல்லாமல் விளையாட்டு

மைதானத்தில் அமைத்திருந்தார்கள், அவர் வருவதற்கும், நானும் என் தம்பியும் புத்தக

கண்காட்சியை விட்டு கிளம்புவதற்கும் சரியாக இருந்தது, அவரைப் பார்க்க மிகவும்

ஆசையாக இருந்தது ஆனால் கட்டுக்கடங்காத கூட்டத்தைப் பார்க்கும் போது நானும் என்

தம்பியும் தயங்கினோம், அரை மனநிலையில் சரி விடு மறுபடியும் வாய்ப்பு கிடைக்கும்

போது பார்த்துக் கொள்ளலாம் என்று அவரை பார்க்கமலே கிளம்பிவிட்டோம்.

"நமக்கு நெருங்கிய உறவுகள் மருத்துவமனையில் இருப்பதாக தகவல் கிடைத்ததும்

பதறிப்போய் போனில் விசாரிப்போம், நேரில் சென்று பார்க்க நினைப்போம்,

ஆனால் வேலை என்கிற கால சூழ்நிலையால் சரி ”பார்த்துக்கலாம்” விடு என்று பார்க்க செல்ல மாட்டோம்.

திடீரென்று இறப்பு செய்தி வரும்!

அவர் இறந்ததைவிட, அவரை பார்க்கும் வாய்ப்பு இருந்தும் தவறவிட்டுவிட்டோமோ

என்று தான் மிகவும் வருத்தப்படுவோம்!

11.08.2015 அன்று ”ஈரோடு புத்தக கண்காட்சி” நிறைவு நாள்!

கலாம் ஐயா மரணமடைந்து (27 July 2015) கிட்டத்தட்ட சரியாக ஒரு வருடம் ஆகிறது!

நெருங்கிய உறவையாவது நேரில் சந்தித்திருப்போம் ஆனால் அவ்வளவு சிறப்பான

மாமனிதரை, சிறந்த ஆசிரியரை பார்க்க வாய்ப்பு இருந்தும் தவற விட்டுவிட்டு..

மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் போது ”பார்த்துக்கலாம்” என்று எண்ணியது எவ்வளவு மடத்தனம்!

I MISS YOU SIR

டிஸ்கி: இது அப்பொழுதே எழுதிய பதிவு, ஆனால் இப்பொழுது தான் பதிவிட முடிந்தது.