நீயா நானா நிகழ்ச்சி (S23 – E350)

Harry Gowtham

7/11/2024

திமிருக்கே திமிர் பிடித்தவள், லிட்டில் பிரின்சஸ், மை லைப் மை ரூல்ஸ்ன்னு இருக்கற இந்த கால பெருபான்மையான 2கே கிட்ஸ் யுவன்/யுவாதிகளுக்கு, சாட்டையடியான ஒரு நிகழ்ச்சி.

வாழ்க்கையை பற்றி எந்த ஒரு கவலையும் இல்லை.

பெற்றோர்கள் எவ்வளவு கஷ்ட படுகிறார்கள், நம்மால் அவர்களுக்கு எவ்வளவு அவமானம் ஏற்படுகிறது என்பதை பற்றி எந்த கவலையும் இல்லை.

காதல், நட்பு, கல்யாணம்ங்கற பேர்ல மத்தவங்க வாழ்க்கையை சீரழிக்கறோம்ன்னு எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லை.

பெற்றோர்கள் சம்பாரிக்கும் பணத்தில் சுகம் கண்டு வாழ்ந்து வருகிறார்கள்.

போதையில் மயங்கி அரிப்பெடுத்து போதும் போதும் என்றளவிற்கு சொரிந்து கொள்கிறார்கள் அதற்க்காக மற்றவர்கள் எவ்வளவு கஷ்ட்டப்பட்டாலும் அவர்களுக்கு அது தெரியப்போவதே இல்லை.

இது போக கொலை செய்ய முயல்கிறார்கள், கொன்றுவிட்டாலும் காவல் துறையினர் நடத்தும் விசாரணைகளில் எந்த வித பயமும், குற்ற உணர்ச்சியும் இல்லாமல் வெகு இயல்பாக பதில் சொல்கிறார்கள்.

அவர்கள் தானும் கெட்டு, அவர்களை சுற்றியுள்ளவர்களையும் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள், இதனின் விளைவு அடுத்த 10 அல்லது 15 ஆண்டுகள் கழித்து தான் அவர்களுக்கு புரிய வரும் அதற்குள் அவர்கள் சமூகத்தையே வேறு மாதிரியான ட்ரெண்ட்செட்டிற்குள் கொண்டு வந்திருப்பார்கள்.

இவர்கள் எல்லாம் நிச்சயம் இந்த நிகழ்ச்சியை பார்க்க வேண்டும்.

இப்படி பட்ட உலகமும் இருக்கிறது, இப்படியும் பெண்கள் இருக்கிறார்கள், வாழ்க்கையில் அடிப்படையான, இயல்பாக கிடைக்கும் விஷயங்களுக்கே அவர்கள் போரடிக்க கொண்டிருக்கிறார்கள் என்று அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்வே நமக்கு கிடைத்த வரம் தான் என்று புரிய அவர்கள் மட்டும் அல்ல நாமும் இந்த நிகழ்ச்சியை கட்டாயம் பார்க்க வேண்டும்.

– ஹேரி கெளதம்