இளையராஜா 💖

Harry Gowtham

6/3/2024

“இசைக்கு பாடல் வரிகள் இரண்டாம் பட்சம் தான் என்று காழ்ப்புணர்ச்சி கொண்ட பாடலாசிரியர்கள் புரிந்து கொள்ள வேண்டும்”

பேசிக்கிட்டே இருக்கும் போது எங்க அக்கா டேய் அம்மா ஹிந்தி பாட்டு எல்லாம் பாடுவாங்கடா தெரியுமான்னு கேட்டாங்க!!!

நான் உடனே எங்க அம்மாகிட்ட பாடுமான்னு சொன்னேன் உடனே ஒரு ஹிந்தி பாட்டு ராகத்தோட பாடுனாங்க, எனக்கு ஒரே ஆச்சரியம்! ஏன்னா எங்க அம்மாவுக்கு எழுத படிக்க தெறியாது, வேறு எந்த மொழியும் தெரியாது அப்படியிருக்க எப்படி எங்க அம்மா ஹிந்தி பாட்டு பாடுனாங்கன்னு எனக்கு ஆச்சரியம் குறையவே இல்ல. அப்போ நான் ஒன்பது அல்லது பத்தாம் வகுப்பு என்று நினைக்கிறேன்.

எப்படிம்மா இந்தி பாட்டு எல்லாம் தெரியும்ன்னு கேட்டேன் இளையராஜா வரதுக்கு முன்னாடி எல்லாம் ஹிந்தி பாட்டு தான் ரொம்ப பேமஸ், நிறைய இந்தி படம் வரும், நாள் கணக்குல ஓடும் திரும்ப திரும்ப பார்த்தனால அப்படியே மனப்பாடம் ஆயிருச்சு ஆனா வரிகள் எல்லாம் என்னென்னு கூட தெரியாது, முன்னெல்லாம் நிறைய பாட்டு பாடுவேன் ஆனா இப்ப நிறைய மறந்துருச்சுன்னு சொன்னாங்க.

அதற்கு பிறகு நடந்தது எல்லாம் வரலாறு.

இசைக்கு பாடல் வரிகள் இரண்டாம் பட்சம் தான் என்று காழ்ப்புணர்ச்சி கொண்ட பாடலாசிரியர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ரகுமான் செய்ததை போலவோ, அனிரூத் செய்ததை போலவோ, இளையராஜா ஆரம்ப காலங்களில் தனது பாடலுக்கு காப்புரிமை செய்திருந்தால் இந்நேரம் உலகிலயே மிகப் பெரிய செல்வந்தராக இளையராஜா இருந்திருப்பார். ஏன் ரொம்ப வேண்டாம் ஒருமுறை பாடல் ஒலிப்பதற்க்கு வெறும் 1₹ வாங்கிருந்தார் என்றால் கூட நினைத்துப் பாருங்கள்? எத்தனை லட்சம் கோடி முறை அவரின் பாடல்கள் ஒலித்திருக்கும்? பணம் ஆசை இல்லாதவர் இளையராஜா.

எத்தனை படங்களுக்கு பணம் வாங்காமல் இசையமைத்து கொடுத்திருப்பார்?

எத்தனை மொக்கைப் படங்கள் இளையராஜாவின் இசைக்காக மட்டுமே ஓடிய வெற்றிப் படங்கள்?

இளையராஜாவின் வீட்டு வாசலில் காத்திருந்தவர்கள், காத்திருந்து பாடல் வாங்கி வெற்றி பெற்ற குடும்பத்தின் வாரிசுகள் எல்லாம் அவர் செய்த நற்பலன்களை அறியாமல் கேவலம் காசுக்கா இன்று நீதிமன்றம் வரை இழுத்து அவரின் மனதினை வேதனைப் படுத்தி கொண்டிருக்கீறீர்கள்.

பரிதாபாங்கள் கோபி, சுதாகார் தனது வீடியோக்களில் பாடலின் வரிகளையோ அல்லது இசையை “ஹம்” செய்தால் கூட அந்த வீடியோக்களுக்கு காப்பி ரைட் குடுத்து விடுகிறார்கள் என்று பல முறை சொல்லி விட்டார்கள்.

கண்மனி அன்போடு பாட்டை வைத்து ஒரு குழு 200 கோடிகளுக்கு மேல் சம்பாரித்து விட்டார்கள். அவர் எதிர்ப்பார்ப்பது அவரிடம் ஒரு அனுமதி மட்டுமே.

ஒரு மீம் க்ரியேட் பண்ணுனாவே ஆயிரத்தெட்டு வாட்டர்மார்க் போட்டுக்கிறானுக,

ஆனா இளையராஜா யார்? வரலாறு என்னவென்றே தெரியாத தற்குறி குஞ்சுமணிகள் எல்லாம் பேசுறதுதான் எரிச்ச மயிறா வருது.

சினிமாவில் நடிகரோ, இசைமைப்பாளரோ, இயக்குனரோ, ஒரு படம் ஹிட் குடுத்துட்டாவே, பந்தா புந்த பன்ற மத்தியில் சொல்கிறேன்

உண்மையிலே இளையாராஜ ஆணவம் இல்லாதவர்!

அவரின் சிறு காணொளிகளை வைத்துக் கொண்டு அவர் ஆணவமாக இருக்கிறார் என்று நீங்கள் நினைத்தால் உண்மையான லூசுப் புந்த நீங்கள் தான்.

எத்தனை எத்தனை மனிதர்களின் தற்கொலை எண்ணங்களில் இருந்து காப்பாற்றியிருப்பார்?

எத்தனை மன வேதனைகள் கொண்ட மனதுக்கு ஆறுதல் அளித்திருப்பார்?

எத்தனை காதல்களுக்கு உயிரோட்டம் குடுத்திருப்பார்?

எத்தனை காதல் தோல்விகளுக்கு மருந்தாக இருந்திருப்பார் என்று எண்ணிப்பாருங்கள்?

நான் பள்ளி வாழ்க்கையில் பாதியில் நிற்க்காமல், படிப்பை முடித்து ஓரளவுக்கு இன்று நல்ல நிலமையில் இருக்க காரணம் இளையாராஜா ஐயாவே

இது போன்று எத்தனையோ லட்சம் பேருக்கு ஏன் கோடிக்கனாக்கான பேருக்கு வாழ்க்கை தடம் புரளாமல் இப்பொழுது நல்ல வாழ்க்கை வாழ இளையராஜா அவர்களின் இசை மட்டுமே காரணம்.

அவர் வாழும் காலத்தில் வாழ்வதே நமக்கு கிடைத்த பாக்கியம்

அவர் இசைப் போல் நீடுழி பல்லாண்டுகள் வாழ இந்த கடவுளை வேண்டுகிறேன்

இசையின் ஏகப் போக கடவுளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

– ஹேரி கௌதம்

#இளையராஜா #பிறந்தநாள் #மேஸ்ட்ரோ #இசைஞானி# ஹேரிகௌதம் #harrygowtham