பாரதியின் இறுதிக்காலம்

கோவில் யானை சொல்லும் கதை

Harry Gowtham

3/31/2020

பாரதியின் வரலாற்றை அறியாதவர்கள், இப்பொழுது வரை பாரதியார் யானை தாக்கி அச்சம்பவத்தாலயே இறந்தாக நினைத்துக் கொண்டுருக்கிறார்கள்.

அது தவறான தகவல்!

பார்த்தசாரதி கோவிலில் யானையால் தாக்கப்பட்ட பாரதியார் அதற்க்கு பிறகு ”மீண்டுழெந்து” பல மாதங்கள் கழித்தே இறந்து போனார்.

பாரதியார் புதுவையிலிருந்து புறப்பட்டு, கடலுரில் கால் வைத்து கைதான நாள் முதல், திருவல்லிக்கேணியில் மறைந்தது முதல்.

அவரை பார்த்தவர்கள் எல்லாம் பாரதியரை ”ஞானக்கிறுக்கர், ஞானி, பிரம்மாஞானி”
என்றே நினைத்தனர்

அவரது செய்கையும் அவ்வாறே இருந்தது காரணம் புதுவை வாழ்வின் இறுதியில்

”அரசியல் சூழல் அமையாமை,

சாமியார்களின் தொடர்பு,

போதை வஸ்து பழக்கம்,

தன் கருத்துக்கு மாறாக மனைவி நடந்து கொண்டதால் ஏற்பட்ட கசப்பும், வெறுப்பும்,

கடலூர் சிறை நாட்களில் மனநலம் குன்றியாமை,

எழுதிக்கொடுத்துவிட்டு விடுதலை பெற்றமைக்காக மைத்துனர் அப்பாத்துரை கடிந்துகொண்டமை,

தன் அடிப்படை லட்சியத்திற்கே ஊறுவிளைவிக்கும் வண்ணம் எழுதிக்கொடுத்துவிட்டு வெளிவந்ததால் ஏற்பட்ட அதிக மனக்குழப்பம்”

போன்றவை பாரதியாரின் தோற்றத்திலும், செய்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

ஏற்கனவே அதீத மன உளைச்சலில் இருந்ததால், யானை தாக்கிய பிறகு உடலளவிலும் அதிகம் பாதிக்கப்பட்டு இருந்தார். சிகிச்சை எடுத்துக் கொள்ளவும் அவர் சம்மதிக்கவில்லை, தளர்ந்து, வளைந்து கொடுக்கும் தன்மை பாரதியாரிடம் இல்லை அதனால் யார் கண்ணுக்கும் தெரியாதபடி அவர் மனம் உடைந்து போயிருந்தது. அதனால் தான் அவ்வளவு விரைவில் பாரதியார் மறைந்து போனார்

பாரதியாரின் இறுதிக் காலங்களில் யானை சம்பவம் அவர் இறப்பதற்க்கு முக்கிய காரணமே தவிர அதனால் அவர் இறக்கவில்லை என்பது பதிவாகிறது.

பாரதியின் வாழ்க்கை வரலாற்றில் எட்டயபுர காலம், காசி காலம், புதுவை காலம், கடையம் காலம், சென்னை காலம் முக்கிய காலங்களாகும் இதில் சென்னை பாரதியாரின் தொடக்கத்திலும், இறுதியிலும் நிகழ்கிறது.

ஏற்கனவே தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், இந்தி, பிரெஞ்சு, வங்காளம், ஜெர்மன், இலத்தீன், உருது, தெலுங்கு என்று பல மொழிகள் அறிந்திருந்த பாரதி தன் இறுதிக்காலத்தில் அரபு மற்றும் மலையாள மொழிகளையும் கற்கத் தொடங்கியிருந்தார்.

அது மட்டுமில்லாமல் அனைத்து கடவுள்களையும் ஒன்றென நினைத்த பாரதி, வேத ரிஷிகளின் கவிதையைத் தமிழில் கண்டதும், குர்ஆனையும், பைபிளையும் மொழி பெயர்க்க விரும்பினார் என்பது இறுதிக்கால நிகழ்வுகளாகும்.

கோவில் யானையால் தாக்கப்பட்டது. பாரதியின் இறுதிக்கால வாழ்வில் முக்கிய நிகழ்வாகும். அச்சம்பவத்தின் தாக்கத்தில் ”கோவில் யானை” எனும் நாடகத்தைப் பாரதி எழுதினார்.
பாரதி நூலெதிலும் இடம்பெறாத இந்நாடகத்தைக் கண்டெடுத்து வழங்கும் இந்நுல் பாரதியியலில் புதிய ஒளியைப் பாய்ச்சுகிறது.

பாரதி விரும்பிகள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்!

ஹேரி கெளதம்

புத்தகத்தின் தலைப்பு

எழுத்தாளார்

வெளியீடு

: பாரதியின் இறுதிக்காலம் (கோவில் யானை சொல்லும் கதை)

: ய.மணிகண்டன்

: காலச்சுவடு பதிப்பகம்